Archive for June, 2008
அன்பு வணக்கங்கள்
மனிதன் அறிவை முதன்மை ஆற்றலாகக்கொண்டுள்ள போதும் உணர்வதை முதன்மை ஆற்றலாக கொண்டு வாழ்பவனே மனிதன். புலன்கள் வழியே மனிதன் பெறுவது அறிவு ஆற்றல் என்றால், மனதில் கருவாய் உயிர்த்து புலன்கள் வழியே பிரசவிக்கப்படுவது உணர்ச்சி ஆற்றல் எனலாம்.அறிவாற்றலின் களம் புற உலகு என்றால் உணர்ச்சி ஆற்றலின் களம் அக உலகு அல்லது உள்ளமாக உள்ளது உள்ளத்தில் பேராற்றலாகப் பொங்கி பிரவகிக்கும் உணர்ச்சி ஆற்றல் அறியப்பட்டு, ஒழுங்கு படுத்தப் பட்டு, உரியவகையில் பிரயோகிக்கப்பட்டு,உங்கள் முன் படைப்புகளாக வெளிவர இருக்கின்றன.
காணாபத்யம் நூல் வெளியீடு
எமது நிறுவனத்தின் ஊடாக அண்மையில் வெளீயீடு கண்ட கன்னி முயற்சியான “இந்து பக்தி கதம்பம் காணாபத்யம்” எனும் நூலை இணையத்தின் வழி இங்கே இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து மேலும் பல நூல்களை வெளியிட உள்ளோம். எமது இந்த முயற்சிக்கு உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை எதிர்பார்கின்றோம்.
காணாபத்யம் நூலை முழுமையாக வாசிக்க இங்கே அழுத்தவும்
