Archive for December, 2008

12 ராசிகளில் குரு மாற்றம்

குருவுக்கான காயத்ரி மந்திரம்
ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு;ப்ரசோதயாத்
குருபகவான்..
அன்பும் கருணையும் நிறைந்த சிவபெருமான் யோகியாய் எழுந்தருளிய நிலையே தட்சிணாமூர்த்தம் ஆகும்.சச்சிதானந்தமாகிய சிவபெருமான் ஆழமரநிழலில் தெற்கு நோக்கி அமர்ந்து கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தவாறு காணப்படும் உருவமே தட்சிணாமூர்த்தி வடிவமாகும். தட்சிணாமூர்த்தியே சனகர்,சனாதனர்,சனந்தனர்,சனற்குமாரர் எனும் நான்கு முனிவர்கட்கும் மெய்யறிவு தரவல்ல ஆகமப் பொருளான சரியை,கிரியை,யோகம்,ஞானம் ஆகிய நாற்பாதங்களை விளக்கி அருளி குருவாக ஞானவடிவினராக விளங்குகின்றார்.