Archive for March, 2010
இந்து சமயத்தில் ஆலயம் அமைப்பதன் அவசியமும் ஆலய கட்டமைப்பும் (பகுதி-8)
ஆலய அமைப்பு முறைகள் பெரும்பாலும் அறிவு மறைக்கப்பட்ட மக்கள் அறிவை பெருக்க வழிகாட்டும் படியாக நன்னெறியில் வழுவாது இருக்கும் படியாக ஒழுக்கம் மரியாதை வளர ஒரு ஆரம்ப பாடசாலையாக அமைக்கப்பட்டிருப்பதை நாம் அவதானிக்கலாம்.
இந்து சமயத்தில் ஆலயம் அமைப்பதன் அவசியமும் ஆலய கட்டமைப்பும் (பகுதி-7)
அறிகுறிப்பொருளின் ஆலய அமைப்பு முறைக்கு அடுத்தாக அருள் நெறிப்பொருளினை அறிய ஆராதணை முறையை பார்த்தால் அர்ச்சகர் (ஆச்சாரியார் அந்தணர்) எனப்படுபவர் ஆலயத்தில் இறைவனை ஆராதிக்கின்ற முறை தெளிவாக்கப்படுகிறது. அர்ச்சகர் இறைவனை ஆராதிப்பவரின் யோக்கிய முறை எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் எனில் சிவப் பிராமண குலத்தில் பிறந்த ஆதி சைவராகிய சிவப்பிராமணர்களில் மணக்குற்றம் உடற்குற்றம் அற்றவராக சமய தீட்சை,விசேஷ தீட்சை,நிர்வாண தீட்சை,ஆசாரியாபிஷேகம் என்னும் நான்கும் பெற்றவர்களாக வேதாகமங்களை நன்கு ஓதியுணர்ந்தவர்களாக இருத்தல் அவசியமான ஒன்றாகும். ஆராதிப்பவராகிய அந்தண [...]
இந்து சமயத்தில் ஆலயம் அமைப்பதன் அவசியமும் ஆலய கட்டமைப்பும் (பகுதி-6)
மனித உடல் உயிர்வாழ ஆதாரமான மூன்று சக்திகளான குண்டலினியும்,ஜீவ சக்தியும்,பிராணசக்தியும் பிரதானமானவை.குண்டலினி சக்தி கண்ணுக்குப் புலப்படாதது. எல்லா உடம்புகளிலும் அடங்கிக்கிடக்கும் ஓர் அக்கினியாகும். அது பிரம்ம சக்தி எனப்படுவது. ஜீவ சக்தி விஷ்ணு சக்தியாக இறைவனிடம் இருந்து நேராக வருவது.
